ஏசாயா58:1 வேத வசனத்தின்படி
சத்தமிட்டுக் கூப்பிடு; அடக்கிக்கொள்ளாதே;
எக்காளத்தைப்போல உன் சத்தத்தை உயர்த்தி,
என் ஜனத்துக்கு அவர்கள் மீறுதலையும்,
யாக்கோபின் வம்சத்தாருக்கு
அவர்கள் பாவங்களையும் தெரிவி.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை என் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்ட நாளில் இருந்து, மக்களின்பாவங்களையும் முரட்டாட்டத்தையும் அறிவிக்க ஆண்டவர் என் இருதயத்திலே ஏவினார். இதைக் குறித்து என்வாழ்வின் ஒவ்வொரு கால கட்டத்திலும் எனக்கு வெளிப்படுத்தி வருகிறார். இயேசுவின் வேதனைகளையும்அவருடைய மனக்காயங்களையும் எனக்கு வெளிப்படுத்தினார், அவர் இருதயத்தின் அழுகையை என் உள்ளத்தில்உணர்ந்து கொண்டு இருக்கிறேன், அதனால் தான் குறிப்பாக இந்த 'இயேசு வருகிறார்' FM (Jesus Coming FM) ஆரம்பித்தேன்.



